Enable Javscript for better performance
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தபால் அட்டைகளை அனுப்பிய வழக்குரைஞர்கள்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தபால் அட்டைகளை அனுப்பிய வழக்குரைஞர்கள்

    By DIN  |   Published on : 25th July 2019 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் தமிழக முதல்வருக்கு தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். 
    மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வழக்குரைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, இதுவரை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்றப் பணி புறக்கணிப்பு, மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலக முற்றுகைப் போராட்டம் போன்ற பல்வேறு வடிவங்களில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 
    இந்நிலையில், மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கம், மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், தனி மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கினர். 
    இதன் முதல்கட்டமாக மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராம.சேயோன், மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வேலு.குபேந்திரன் ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள், மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் இருந்து கோரிக்கை அடங்கிய தபால்களை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai