Enable Javscript for better performance
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முதல்வருக்கு கல்லூரி மாணவிகள் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முதல்வருக்கு கல்லூரி மாணவிகள் கடிதம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, பொதுத் தொழிலாளர் சங்கம் அறிவித்த 1 லட்சம் தபால் அட்டைகளை முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவிகளிடம் இருந்து புதன்கிழமை தபால் அட்டைகள் பெறப்பட்டன. 
    மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பி வைக்க பொதுத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானித்தது. அதன்படி, சீர்காழியில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட தபால் அட்டைகள் எழுதி அனுப்பும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை ஞானாம்பிகை மகளிர் கல்லூரி வாயிலில், மாணவிகள் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தபால் அட்டையில் எழுதி, தமிழக முதல்வருக்கு அனுப்பிடும் போராட்டத்தை கல்லூரி வாயிலில் மேற்கொண்டனர். நிகழ்ச்சியை பொது தொழிலாளர்கள் சங்கத் தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான  ஜெக. வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். 
    இதில், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஜனபுனிதம் அமைப்பின் தலைவர் ஜெயக்குமார்ஜி, சீனிவாசன், ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தர்மலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai