Enable Javscript for better performance
ரயில் பயணிகள் விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
    ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை திருச்சி கோட்ட ஆணையர் எஸ்.எப். மொகிதீன் உத்தரவின்பேரில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர்.
    ரயில், ரயில் நிலைய நடைமேடைகளில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளைக் கண்டால் சைல்டு லைன் எண் 1098, ஆர்.பி.எப். ஹெல்ப் லைன் 182, ஜி.ஆர்.பி. எண் 1512 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்  தெரிவிக்க வேண்டும். அறிமுகமில்லாத சக பயணிகளிடமிருந்து உணவுப் பொருள்கள், குளிர்பானங்களை வாங்கி உண்ணவும், குடிக்கவும் கூடாது. அதிகமான நகைகளை அணிந்தபடி ரயிலில் பயணம்  செய்யக் கூடாது. படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்தலைத் தவிர்க்க வேண்டும். ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த பிரசாரம் நடைபெற்றது.
    ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் கொண்ட குழுவினர் பறை அடித்தும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பிரசாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் (பொறுப்பு) மோகன், உதவி ஆய்வாளர் வி. பாரதி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், பயணிகள்
    பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai