Enable Javscript for better performance
விதை அழுகலை தடுக்கும் மருந்து உற்பத்தி: விவசாயிகளிடையே வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    விதை அழுகலை தடுக்கும் மருந்து உற்பத்தி: விவசாயிகளிடையே வரவேற்பு

    By DIN  |   Published on : 25th July 2019 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில் விதை அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கை முறையில் மருந்து உற்பத்தி செய்வது விவசாயிகளிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
    மழை வெள்ளம், கடும் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளை சமாளித்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நெற்பயிர்கள், உளுந்து, பயறு, மக்காச்
    சோளம் போன்ற பயிர்கள் விதை அழுகல் நோய் மற்றும் பூச்சித் தாக்குதலால் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. பாதிப்பை சரிசெய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த கலப்பின உரங்கள், மருந்துகளால் பயிர்களும், விளைநிலமும் பாதிக்கின்றன. 
    இந்நிலையில், இயற்கை மருந்துகள் மூலம் விதை அழுகலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த 2 விவசாயிகள், தமிழக அரசின் வேளாண் துறை மூலம் மானியம் மற்றும் வழிகாட்டுதல்படி உயிரி விதை நேர்த்தி மருந்தை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து நாகை மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செய்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது.  அதன்படி சீர்காழி அருகேயுள்ள கீழசட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பக்தவச்சலம், திருவாலி பகுதியைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி ஆகியோர் சீர்காழி வேளாண் துறை மூலம் டிரைகோடெர்மா டி- விரிடி என்ற விதை நேர்த்தி மருந்தை லாபகரமாகவும் மற்ற விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும் உற்பத்தி செய்து வருகின்றனர். 
    இதுகுறித்து விவசாயி பக்தவச்சலம் கூறியது: நெல், மக்காச்சோளம், உளுந்து, பயறு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் போது பல நேரங்களில் விதை அழுகல் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும். அதைத் தடுக்கும் வகையில் வேளாண் துறை மூலம் ரூ. 75 ஆயிரம் மானிய உதவியில் உயிர் விதை நேர்த்தி மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. டிரைகோடெர்மா டி விரிடி மற்றும் சூடோமோனாஸ் ஆகிய விதை நேர்த்தி மருந்துகள் முற்றிலும் இயற்கை முறையில் தயார் செய்யப்படுகின்றன.   உருளைக்கிழங்கை நன்கு கொதிக்கும் நீரில் வேகவைத்து பிறகு அந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனுடன் வேளாண் துறை கொடுக்கும் திரவம் சில சொட்டுக்கள் சேர்த்து இந்த மருந்து தயார் செய்கிறோம். நெல் போன்ற சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த விதை நேர்த்தி மருந்தை 1 ஏக்கருக்கு இரண்டரை கிலோ என எடுத்துக் கொண்டு மணலுடன் கலந்து நிலத்தில் தூவவேண்டும் அல்லது தேவையான அளவு இந்த மருந்தை தண்ணீரில் கலந்து கொண்டு அதில் நாற்று வேரை நனைத்து பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்வதால் விதை அழுகல் நோய் ஏற்படாது. பூச்சித்தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். 
    இயற்கை முறையில் தயார் செய்யப்படும் இந்த விதை நேர்த்தி மருந்து குறைந்த விலையில் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரசாயனம் கலந்த மருந்து வெளியில் கடைகளில் கிலோ ரூ. 135-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். இந்த விதை அழுகலை தடுக்கும் மருந்து உற்பத்திக்கு விவசாயிகள் பலர் வரவேற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai