முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா வழிபாடு
By DIN | Published On : 30th July 2019 06:50 AM | Last Updated : 30th July 2019 06:50 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் பல்வேறு அம்மன் கோயில்களில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ வேதநாயகி அம்மனுக்கு நடைபெற்றுவரும் ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, பூதவாகனத்தில் அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வழிநெடுங்கிலும் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
துளசியாப்பட்டினம் சிங்கமுக காளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை
நடைபெற்றது.
இதேபோல், தகட்டூர் ஆகாச மாரியம்மன் கோயில், தென்னடார் முத்துமாரியம்மன் கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அம்மனுக்கு மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல், ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளிய வீதியுலாவரும் காட்சி நடைபெற்றது. செண்பகராயநல்லூர் செண்பகவல்லியம்மன் கோயிலில் அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளிய வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.