முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திருவெண்காடு கோயிலில் நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 30th July 2019 06:50 AM | Last Updated : 30th July 2019 06:50 AM | அ+அ அ- |

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நாயன்மார்களுக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் சிவனை போற்றி பாடல்களை பாடி உள்ளனர். இந்த 63 நாயன்மார்களை வழிபாடு செய்தால் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், பல்வேறு நன்மைகளை வழங்குவதாகவும் ஐதீகம். இத்தகைய சிறப்புபெற்ற 63 நாயன்மார்களுக்கு திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னதி உள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற சோமவார பிரதோஷத்தையொட்டி, 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், வாசனைதிரவியங்கள் மற்றம் இளநீர் உள்ளிட்ட பொருள்களால் நாயன்மார்களுக்கு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன், நாயன்மார்கள் வழிபாட்டு மன்றத்தலைவர் பாபு, துணைத் தலைவர் சங்கர், இணைச் செயலாளர்கள் அம்பேத், ராஜேந்திரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.