முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரி மக்கள் சந்திப்புக் கூட்டம்
By DIN | Published On : 30th July 2019 06:51 AM | Last Updated : 30th July 2019 06:51 AM | அ+அ அ- |

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி, தரங்கம்பாடி வட்டத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) முதல் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
திருக்கடையூர், ஆக்கூர் முக்கூட்டு, ஆக்கூர், மேலப்பாதி, செம்பனார்கோவில், இலுப்பூர், வேலம்புதுக்குடி, நல்லாடை, திருவிளையாட்டம் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடம் புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, கையெழுத்து இயக்கம் நடத்திவருகின்றனர்.
செம்பனார்கோவிலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் கையெழுத்து இயக்கத்துக்கு குணசேகரன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, வட்டச் செயலாளர் சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிம்சன், ராசையன், ரவிச்சந்திரன், கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.