முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 358 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 30th July 2019 06:53 AM | Last Updated : 30th July 2019 06:53 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 358 மனுக்களை அளித்தனர்.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மாதாந்திர உதவித் தொகை உத்தரவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற ஒருவரின் வாரிசுதாரருக்கு தமிழ்நாடு மாநில நோயாளர் நலநிதி மூலம் ரூ. 25 ஆயிரத்துக்கான நிவாரணத் தொகை ஆகியன வழங்கப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 342 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 16 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கே. ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.