முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மருத்துவ முகாம்: எம்பி பங்கேற்பு
By DIN | Published On : 30th July 2019 06:49 AM | Last Updated : 30th July 2019 06:49 AM | அ+அ அ- |

குத்தாலம் வட்டம், கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம், குத்தாலம் லயன்ஸ் சங்கம் மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் பிச்சைமணி வரவேற்றார். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் டாக்டர் சிக்கந்தர் ஹயாத்கான், முத்துகுமார், ராஜ்குமார் மற்றும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ. இராமலிங்கம் முகாமைத் தொடக்கி வைத்தார். அப்போது, கோமல் கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களோடு இணைந்து மரக்கன்று நட்டு வைத்தார்.
இம்முகாமில் கண், தோல், காது மூக்கு தொண்டை, எலும்பு, மகளிர், குழந்தைகள் மற்றும் பொது மருத்துவம் சார்ந்த 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினரால் சுமார் 550 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 280 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரைப் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர். உதவி திட்ட அலுவலர் இராமச்சந்திரன் நன்றி கூறினார்.
சங்கரன்பந்தலில்...
பொறையாறு, ஜூலை 28: சங்கரன்பந்தலில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரக்குமார் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமருத்துவம், எலும்பு முறிவு, இதயம், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து வித மான நோய்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முத்தவல்லி அப்துல் ரகுமான், லயன் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் இராமராஜ், வட்டாரத் தலைவர் கார்த்திக், தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .