Enable Javscript for better performance
தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி மனு

    By DIN  |   Published on : 01st June 2019 10:07 AM  |   அ+அ அ-   |    |  

    தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 
    தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூலிப்பை தடுக்க வேண்டும், அரசுக் கல்லூரிகளில் கூடுதல் பாடப் பிரிவை சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் சி. மோகன்குமார், நிர்வாகிகள் காளிஆனந்த், சிவா, கண்ணன், பாலா ஆகியோர் அளித்த கோரிக்கை மனு விவரம்: மயிலாடுதுறை கோட்டத்தில் இயங்கிவரும் சில தனியார் உதவிப்பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களிடம் அரசு அறிவித்த கட்டணங்களுக்கு மாறாக நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் 
    வசூலிக்கப்படுகிறது. 
    இதனால், பட்டப்படிப்பு படிக்க விரும்பும் நடுத்தர, ஏழை மாணவர்களின் எண்ணம் கனவாகி போய் விடுகிறது. எனவே, நிகழாண்டு தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பாடப்பிரிவை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதுபோல், மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளங்கலை விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல் ஆகிய 3 பாடப் பிரிவுகளையும், கூடுதலாக முதுகலை பாடப் பிரிவுகளை நடப்பு கல்வியாண்டில் தொடங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் 
    குறிப்பிடப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp