காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு

குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். குறுவை சாகுபடிக்கு, காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு, காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் விடுத்த உத்தரவை அமல்படுத்தி, தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரவைக் கூட்டம்: இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றிய சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. 
சங்கத்தின் ஒன்றியத் தலைவர் தலைவர் பி. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, மாவட்டக் குழு உறுப்பினர் மா. முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளங்கிப் பேசினர்.
இக்கூட்டத்தில், கடந்த ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை, கஜா புயல் பாதிப்புக் கருதி ரத்து செய்ய வேண்டும். விடுபட்டுள்ள தென்னை  விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். வேதாரண்யம் பகுதியில் நீடிக்கும் கடல்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள மல்லிகை உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு: கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவராக பி. பன்னீர்செல்வம், செயலாளராக கோவை.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com