பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

நாகையில் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

நாகையில் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
2019-2020-ஆம் கல்வி ஆண்டின் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நாகை, வலிவம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.  இப்பணியை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வுக்குப் பின்னர், சான்றிதழ் சரிபார்ப்புக்காக நாகை மாவட்டத்தில் 1,609 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுவரை 1,157 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், 1,068 மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 89 மாணவர்களின் சான்றிதழ்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி இப்பணி ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்
சீ. சுரேஷ்குமார். வருவாய் நீதிமன்றப் பணிகள் துணை ஆட்சியர் முருகேசன், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிசேகர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com