சுடச்சுட

  

   

  மயிலாடுதுறை, ஜூன் 13: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் பகுதியில், தாய் மயிலை பிரிந்து, தவித்த மயிலின் குஞ்சு புதன்கிழமை வனத் துறையில் ஒப்படைக்கப்பட்டது.
  மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் தென்கரையில் குளஞ்சிநாதன் என்பவர், கடந்த மாதம் தனது உணவகத்தின் மேற்கூரையில் பல நாள்களாக மயில் இருப்பதை பார்த்து வெயிலின் தாக்கத்தால் மயில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து தீயணைப்புத் துறையிருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்து பார்த்த தீயணைப்புத் துறையினர், மயில் 3 முட்டைகள் இட்டு, அதை அடைகாத்து இருப்பதை அறிந்து அந்த முட்டைகளை அதே இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றனர். இந்நிலையில், புதன்கிழமை முட்டையிலிருந்து பொறிந்த ஒரு மயில்குஞ்சு கூரையில் இருந்து கீழே விழுந்து தவித்ததைக் அறிந்த உணவக உரிமையாளர் அதை மீட்டு, சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் மற்றும் மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வனத் துறை தோட்ட பாதுகாப்பு ஊழியர் கலைவாணனிடம் ஒப்படைத்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai