சுடச்சுட

  


  வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடை வீதியில் நூல் அறிமுகம், பாராட்டு விழா புதன்கிழமை இரவு நடை பெற்றது.
  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் நிர்வாகி கோ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், "பெரியார் அன்றும் இன்றும்', "அம்பேத்கர் அன்றும் இன்றும்', "மார்க்சியம் அன்றும் என்றும்' ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராசுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  நிகழ்ச்சியில், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திரைப்பட இயக்குநர் வ. கெளதமன், எழுத்தாளர் பாமரன், வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு, விவசாயிகள் கூட்டு இயக்க நிர்வாகி காவிரி. தனபாலன், திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் எல்.எஸ்.இ. பழனியப்பன், புயல் குமார், ஒருங்கிகிணைப்பாளர் பார்த்தசாரதி, கோவி. ராசேந்திரன், உள்ளிட்டோர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai