பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 14th June 2019 10:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும். விலையில்லா பாடப் புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிகளில் கட்டட வசதி, கழிவறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்எப்ஐ அமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, மாணவர்கள் பள்ளியிலிருந்து பேரணியாக வந்தனர். இதேபோல் வைத்தீஸ்வரன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி முன் நீட் தேர்வு ரத்து, பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.