ஏவிசி பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு முகாம்
By DIN | Published On : 14th June 2019 10:54 AM | Last Updated : 14th June 2019 10:54 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை, ஜூன் 13: மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டுத்துறை சார்பில், "சேவை சார்ந்த மென்பொருள் கட்டமைப்பு' என்ற தலைப்பில், ஆறு நாள் ஆசிரியர் மேம்பாட்டு முகாம் புதன்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு, ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் விஜயரங்கன் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தார். விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "சேவை சார்ந்த மென்பொருள் கட்டமைப்பு' என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார். கல்லூரி இயக்குநர் செந்தில்முருகன் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் செல்வமுத்துக்குமரன் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி டீன் பிரதீப் அறிமுக உரையாற்றினார்.
விழாவில், ஏவிசி கல்வி நிறுவனங்களின் பொருளாளர் ஞானசுந்தர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் ராகவன், மகேஷ், மாலதி ஆகியோர் கலந்துகொண்டனர். கணினி பயன்பாட்டுத்துறை பேராசிரியர் சுகந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பேராசிரியர் கனிமொழி நன்றி தெரிவித்தார்.