புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: இரா. முத்தரசன் வலியுறுத்தல் 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைவரது கருத்துகளைக் கேட்டறிய தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைவரது கருத்துகளைக் கேட்டறிய தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக் கொண்டார். 
நாகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கல்வியை மத்தியப் பட்டியலிலிருந்து, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது மத்திய அரசு திணிக்க முயற்சிப்பது  ஜனநாயக விரோத செயல். ஜனநாயகம் தழைக்க, கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தின் விவசாயம் முழுமையாக பாழாகும். எனவே, தமிழக அரசு உறுதியாக இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். 
ஹைட்ரோ கார்பன், பசுமை வழிச்சாலைத் திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைப்பு என தமிழகத்தில் தற்போது நடைபெறும் பணிகள் அனைத்தும், தமிழகத்தின் விவசாயத்தை முழுமையாக அழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்படுத்துவதாகவே தெரிகிறது.
சென்னையில் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1,500 என்ற விலையிலிருந்து தற்போது ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மக்கள் சந்தித்து வரும் குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றார்.
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com