ஆஞ்சநேயருக்கு மூலநட்சத்திர வழிபாடு
By DIN | Published On : 18th June 2019 07:48 AM | Last Updated : 18th June 2019 07:48 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஏக சக்கர நாராயணப் பெருமாள் கோயிலில் மூலநட்சத்திரத்தையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வடமாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வலிவலம் மற்றும் அதனை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ராமசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.