ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
By DIN | Published On : 19th June 2019 08:08 AM | Last Updated : 19th June 2019 08:08 AM | அ+அ அ- |

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் நாகை கலங்கரைவிளக்கத்தில் செவ்வாய்க்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினர்.
ராகுல் காந்தியின் பிறந்த நாளை நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆண்டு தோறும் வித்தியாசமான முறையில் கொண்டாடுவது வழக்கம். இதன்படி, ராகுல் காந்தியின் 49-ஆவது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் நாகை கலங்கரைவிளக்கத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைத் துறை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர். நவ்சாத், காங்கிரஸ் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் வரதராஜன், கட்சியின் மனித உரிமைத் துறை நிர்வாகி முகமது ரபீக், மீனவரணி நிர்வாகி மோகன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி உதயச்சந்திரன், சிறுபான்மைத் துறை பொறுப்பாளர் முகமது ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.