மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நலனுக்குத் தொண்டாற்றிய இளைஞர்கள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சமூக நலனுக்குத் தொண்டாற்றிய இளைஞர்கள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்த இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், சேவையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு முதல்வரின் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது.  இதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குத் தேர்வுப் பெறுவோருக்கு சுதந்திர தின விழாவின் போது, மாநில இளைஞர் விருது, ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். தலா 3 ஆண்கள், 3 பெண்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில், தமிழகத்தில் சமூக நலனுக்கான சேவைகள் செய்திருக்க  வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். 
விண்ணப்பதாரரின் சேவை தன்னார்வம் கொண்டதாகவும், சமுதாயம் அல்லது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருக்க வேண்டும். இந்தச் சேவை தெளிவாக அளவிடக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்.  
ஊரகம் மற்றும் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் ஆற்றிய சேவைப் பணிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் செயல்பாடுகள், முறைசாரா மற்றும் வயது முதிர்ந்தோருக்கான கல்வித் திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையிலுள்ளவர்கள், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்துக்கான பணிகள், உள்ளூர் தேவைகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் முக்கியமாகக் கருதப்பட்ட பிற பணிகள், இவ்விருதுக்குக் கருத்தில் கொள்ளப்படும். 
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. 
விருது பெறத் தகுதியானவர்கள், w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளம் மூலம் ஜூலை 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com