வேளாங்கண்ணி பகுதியில் மின் சீரமைப்புப் பணி

வேளாங்கண்ணி பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

வேளாங்கண்ணி பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
வேளாங்கண்ணியைச் சுற்றியுள்ள கடற்கரையோர கிராமங்களில் பயன்பாட்டில் உள்ள  மின்பாதைகளில்  உப்பு மண் படிவதால், மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள இன்சுலேட்டர்கள், மின் பாதைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், வேளாங்கண்ணி, தெற்குப் பொய்கைநல்லூர், வடக்குப் பொய்கைநல்லூர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். 
இதையடுத்து, தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளின் நடவடிக்கையின்பேரில், மின்பாதைகள், மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள இன்சுலேட்டர்களில் படியும் உப்பு மண்ணை அகற்றும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை வேளாங்கண்ணி முதல் பாப்பாக்கோவில் வரையுள்ள மின்பாதைகளை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்றன. 
இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகள், உயர்மின் அழுத்த மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள இன்சுலேட்டர்களில் தண்ணீர் பீய்ச்சி மண் துகள்களை சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன. 20-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் இப்பணிகளில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com