சுடச்சுட

  

  ஊராட்சி எழுத்தர்கள் கலந்தாய்வுக் கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

  By DIN  |   Published on : 26th June 2019 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி எழுத்தர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
  இதில் மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், ஊராட்சி எழுத்தர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தினார். மேலும், கிராமங்களில் குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும், குடிநீர் தேக்கத் தொட்டிகளைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். 
  கூட்டத்துக்கு, ஒன்றிய ஆணையர் வாணி தலைமை வகித்தார். திட்ட மேலாளர் ஏ.பி.ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், திருநாவுக்கரசு, மைவிழி, ஷோபனா, பிரேமா, ஒன்றிய பொறியாளர்கள் தெய்வானை, கிருஷ்ணகுமார், பணி மேற்பார்வையாளர்கள் அன்பழகன், பாபு, கம்பர், ராஜ்குமார், அபிராமி, பூங்குழலி, அகிலா மற்றும் 54 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி எழுத்தர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்)
  கலியராஜ் நன்றி தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai