சுடச்சுட

  

  சீர்காழி அருகேயுள்ள திருவாலி ஏரியில் இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து, திமுக கிழக்கு ஒன்றியச் செயலர் என். சசிக்குமார், மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணியிடம் அண்மையில் அளித்த கோரிக்கை மனு விவரம்: சீர்காழி வட்டம், திருவாலி கிராமத்தில் உள்ள ஏரி உலக வங்கி நிதி உதவியுடன் ஏரிக் கரையை பலப்படுத்தி பராமரிப்பு பணி செய்வதற்கு ஒப்பந்தம் எடுத்து பணி நடந்து வருகிறது. இதில், ஏரியை ஆழப்படுத்தி அதில் உள்ள மணலை குவித்து வைத்து இரவு நேரங்களில் அந்த மணல் தனியார் மணல் குவாரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுகுறித்து, திருவெண்காடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai