சுடச்சுட

    

    குடிநீர் வழங்கக் கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 26th June 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் குடிநீர் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து கிராமங்களுக்கும் போர்க்கால அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கடும் வறட்சி நிலவி வருவதால் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி சட்டக் கூலி ரூ. 229 வழங்க வேண்டும், ஊரக வளார்ச்சித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ள தேர்தல் அன்று விடுப்புடன் கூடிய ஊதியத்தை ஊரக வளார்ச்சி திட்ட பயனாளிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளார்கள் சங்கம் கொள்ளிடம் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    வட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வட்டக்குழு உறுப்பினர்கள் அய்யாசாமி, பாஸ்கர், அகில இந்திய மாதர் சங்க வட்டச் செயலர் இந்திராகாந்தி, வட்டத் தலைவர் விசாலாட்சி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனு  ஒன்றிய ஆணையரிடம் நேரில் வழங்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai