சுடச்சுட

  

  நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
  கோடியக்கரை வனப் பகுதியைச் சேர்ந்த பழைய கலங்கரை விளக்கம் கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. சடலமானவர் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தகவலறிந்த வேதாரண்யம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்குள்படுத்தினர். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai