சுடச்சுட

  

  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
  பள்ளிகளில் இந்தி பாடத்தை கட்டாயமாக்கக் கூடாது, புதிய கல்வி கொள்கை குறித்து கருத்துத் தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதமாக நீட்டிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
  இந்திய மாணவர் சங்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில், நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  போராட்டத்தின் நிறைவில், புதிய கல்விக் கொள்கை நகல் எரிக்கப்பட்டது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai