சுடச்சுட

    

    மயிலாடுதுறை அருகே தோப்பில் மாங்காய் திருடியதைக் காட்டிக் கொடுத்ததாக இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 
    கொற்கை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கார்த்தி (35). கட்டுமானத் தொழிலாளி. கொற்கை பாண்டூர் சாலையைச் சேர்ந்த குணசீலன் (22), தெற்குத் தெருவைச் சேர்ந்த மணிவாசகம் (23) ஆகிய இருவரும் இவரிடம் திங்கள்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டு, முத்துப்பிள்ளை என்பவரது மாந்தோப்பில் நாங்கள் மாங்காய் திருடியதாக கிராம மக்களிடம் ஏன் சொன்னாய் என்று கேட்டு, அவரை தாக்கினராம். இதில், கார்த்தி படுகாயம் அடைந்தார். சப்தம் கேட்டு கிராம மக்கள் கூடியதும் இருவரும் தப்பியோடினர்.  இதையடுத்து, கார்த்தியை கிராம மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து மணல்மேடு காவல் ஆய்வாளர் தியாகராஜன் வழக்குப் பதிந்துள்ளார். கொலையுண்ட கார்த்திக்கு, குணசுந்தரி என்ற மனைவியும், திவாகர்(13) என்ற மகனும், பிரியதர்ஷினி(12) என்ற மகளும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai