சுடச்சுட

  

  மயிலாடுதுறை பகுதியில் மின்தடை அறிவிப்பு செய்வதில் ஏற்படும் குளறுபடியால் சிறு உணவங்கள் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
  மயிலாடுதுறையில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி மாதத்தில் ஒருநாள் மின்சார விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின்நிறுத்த அறிவிப்பு முன்கூட்டியே மின்வாரியத்தால் செய்திகள் வெளியிடப்படுகிறது. பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இந்த தகவலால் தமது பணிகளை மின்சார தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்கின்றனர். சில உணவகங்கள் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் மின் நிறுத்தம் அறிவிக்கப்படும் நாளில் விடுமுறை அறிவித்து விடுகின்றனர். அங்கே பணியாற்றும் சமையல் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலையையும், வருவாயையும் இழக்கின்றார்கள். இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. 
  மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள  மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை நகரம், மூவலூர், சோழசக்கரநல்லூர், வடகரை, ஆனதண்டாவபுரம், வழுவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும், செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய அலுவலகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.  
  அறிவிப்பையடுத்து, பல சிறு உணவகங்களில் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு மாறாக மின்நிறுத்தம் செய்யப்படவில்லை. இதனால் விடுமுறை அறிவித்த தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் நஷ்டம் அடைந்தனர். எனவே, வரும்காலங்களில் மின்தடை அறிவிப்பு முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்கள் சிறு தொழில் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai