ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கக் கோரிவிவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரி, விவசாயத்

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரி, விவசாயத் தொழிலாளர் சங்கம் (மார்க்சிஸ்ட் சார்பு) சார்பில் நாகை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு 150 நாள்கள் பணி வழங்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
 நாகை
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர் சங்க நாகை ஒன்றியச் செயலாளர் எஸ்.என். ஜீவாராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி. ராதா, கே. மாரிமுத்து, ஏ. மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி,  விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், விவசாயத் தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தின் நிறைவில்,  வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.எஸ். வெற்றிச்செல்வனிடம் கோரிக்கை மனுக்கள்
அளிக்கப்பட்டன.  
கீழையூர்
கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க நாகை மாவட்டத் தலைவர் கே. சித்தார்த்தன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி. மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம். முருகையன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர். முத்தையா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. ஜெயராமன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரளனோர் கோரிக்கை மனு
அளித்தனர்.
தலைஞாயிறு
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எம். ஆறுமுகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ. வேணு மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் திரண்ட தொழிலாளர்கள் வேலை கோரி முழக்கமிட்டனர். பின்னர் வறட்சி நிலவுவதை கருத்தில் கொண்டு நூறுநாள் வேலை வாய்ப்பை உடனே வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரியிடம் மனு அளித்தனர். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, அகில இயந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வெற்றிச்செல்வன், இளையபெருமாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
திருமருகலில்...
திருமருகல், ஜூன் 25: திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்க பொறுப்பு செயலர்  கோ. பாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒன்றிய விவசாய சங்கத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் எம். ஜெயபால் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், விவசாய சங்க ஒன்றியச் செயலர் பொன்மணி, ஒன்றியத் தலைவர் ஸ்டாலின் பாபு, இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவர் பாலு, செயலாளர் சதிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
செம்பனார்கோவிலில்...
பொறையாறு, ஜூன் 25: குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தி, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க வட்டச் செயலாளர் காபிரியேல்  தலைமை வகித்தார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசாய சங்க வட்டச் செயலாளர் இராசையன், கோவிந்தசாமி, பஷீர் அகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், வி.தொ.ச. வட்டத்தலைவர் பரமசிவம், வட்டப் பொருளாளர் அமிர்தலிங்கம், வாலிபர் சங்க வட்டத் தலைவர் சரவணன், மாதர் சங்க வட்டச் செயலாளர் வெண்ணிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com