விதவைப் பெண்கள் தின மாநாடு

நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் நாகையில் விதவைப் பெண்கள் தின மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் நாகையில் விதவைப் பெண்கள் தின மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத் தலைவர் ஜெ. புஷ்பா தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் ஜி. கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் பாத்திமா அமுதா, மதுரை ஐடியாஸ் அமைப்பின் இயக்குநர் சி. பால்மைக், விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க பொருளாளர் பி. செராபின், நிர்வாகக் குழு உறுப்பினர் பி. கஸ்தூரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
இந்த மாநாட்டில், விதவைப் பெண்கள் பாகுபாடு மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்ட உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், விதவைப் பெண்களின் வாழ்வுநிலை குறித்து முழுமையான புள்ளி விவரங்களை 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com