மார்ச் 8-இல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 02nd March 2019 07:39 AM | Last Updated : 02nd March 2019 07:39 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் மார்ச் 8-ஆம் காலை 10 மணிக்கு நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீர்வு பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.