செஞ்சிலுவைச் சங்கம் நிவாரண உதவி
By DIN | Published On : 04th March 2019 07:51 AM | Last Updated : 04th March 2019 07:51 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பனையங்காடு ஐயனார் கோயில் தெரு, கொல்லித்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கஜா புயலின் சீற்றத்தால் குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் சுமார் 150 குடும்பத்தினருக்கு தார்ப்பாய், அடுப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியன வழங்கப்பட்டன. இதேபோல், அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன.
இந்த பணியில் வேதாரண்யம் வட்டார சங்கத்தின் தலைவர் அ. வேதரத்னம், செயலாளர் பொன். தர்மதுரை, பொருளாளர் மதியழகன், நிர்வாகிகள் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.