362 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 362 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 362 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை வழங்கினார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 24 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ. 98 லட்சம் மதிப்பிலான சுனாமி குடியிருப்புப் பட்டாக்கள், முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகள், உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ. 2.05 லட்சத்துக்கான காசோலை, 37 பேருக்கு முதியோர் மற்றும் விதவைத் தொகை உத்தரவு, 152 பயனாளிகளுக்கு ரூ. 15.20 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியன வழங்கப்பட்டன.
மேலும், சமூகநலத் துறை சார்பில் 10 பேருக்கு திருமண உதவித் தொகை மற்றும் தங்க நாணயங்கள், தாட்கோ மூலம் ஒருவருக்கு ரூ. 1.42 லட்சம் மதிப்பில் சுமையேற்றும் வாகனமும், ஒருவருக்கு ரூ. 2.17 லட்சம் மதிப்பில் பயணியர் வாகனமும் பெறுவதற்கான ஆணைகள், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் 15 பேருக்குத் தலா ரூ. 2,500 மதிப்பில் கோழிக்குஞ்சுகள் மற்றும் கூண்டுகள் உள்பட 362 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சீர்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஆ. சுமதி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com