தேவூர் கோயிலில் மகா லெட்சுமி குபேர யாகம்

கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் அருள்மிகு தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ மகா லெட்சுமி குபேர மகா யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் அருள்மிகு தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ மகா லெட்சுமி குபேர மகா யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று மகா லெட்சுமி குபேர யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், நிகழாண்டுக்கான மகா லெட்சுமி குபேர யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் விநாயகர் பூஜையும், தொடர்ந்து  மகா லெட்சுமி குபேர மகா யாகமும் நடைபெற்றது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, குபேரன், மகா லெட்சுமி மற்றும் சிவன் ஆகிய தெய்வங்களை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் ராமலிங்கம், செளந்தராஜ குருக்கள், ரமேஷ் சிவாச்சாரியார், திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் 
செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com