வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

திருமருகல் பேருந்து நிலைய பகுதியில் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு வாக்களிக்கும்

திருமருகல் பேருந்து நிலைய பகுதியில் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் இயந்திரம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை துணை ஆட்சியர் கமல்கிஷோர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். 
நிகழ்ச்சியின்போது, வாக்காளர் தாம் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவியை வாக்காளர்கள் பார்வையிட்டு வாக்கினை பதிவு செய்து தெரிந்து கொண்டனர். மேலும் வாக்காளர் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய அச்சிட்ட தாளை 7-விநாடிகளுக்கு பார்க்க அனுமதிக்கும் இந்த இயந்திரம் நீங்கள் தெரிவு செய்து வாக்களித்த வேட்பாளருக்குத் தான் உங்கள் வாக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், சரிபார்க்கவும் இந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை பார்வைக்கு வைத்திருந்தனர். பின்னர் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரதான சாலை, சந்தைப் பேட்டை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், நாகை வட்டாட்சியர் சங்கர், வருவாய் ஆய்வாளர்கள் பிரபாகரன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com