சுடச்சுட

    

    பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்: விவசாயிகள் முற்றுகை

    By DIN  |   Published on : 17th March 2019 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    செம்பனார்கோவில் அருகே பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆறுபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  அன்னவாசல், ஆறுபாதி, இளையாலுர், முக்கரும்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 321 விவசாயிகள் 2017-2018- ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்திருந்தனர்.
    இந்நிலையில், 108 விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகள் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, கூட்டுறவு வங்கிக்குச் சென்று கேட்டபோது, அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
    இதைக் கண்டித்தும், காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் தெரிவித்தும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai