Enable Javscript for better performance
போலீஸார்- பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    போலீஸார்- பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 17th March 2019 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில், போலீஸார்- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கூறைநாடு, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
    இதில், பல்வேறு விதமான துப்பாக்கிகளைக் கையாளும் விதம் குறித்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மாணவ, மாணவியருக்கு செயல் விளக்கம்
    அளித்தார்.
    மேலும், பெண்கள், முதியோர்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து, பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் செயலியை, செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம்அளிக்கப்பட்டது.
    இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் வி.எஸ். சிவவடிவேல் தலைமை வகித்தார். கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜி. பாஸ்கரன், சி.செல்லதுரை, உடற்கல்வி ஆசிரியை வி.விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரயில் நிலைய மேலாளர் மனோகரன் ரயில்வே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கினார். இதில், தலைமைக் காவலர்கள் ஐயப்பன், பதி, தர்மராஜன், செந்தில், அனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai