அன்னை அஜ்மத் பீவி தர்கா கந்தூரி விழா

சீர்காழியை அடுத்த மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத் பீவி தர்காவில் 77-ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா அண்மையில் நடைபெற்றது.மேலச்சாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு


சீர்காழியை அடுத்த மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத் பீவி தர்காவில் 77-ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா அண்மையில் நடைபெற்றது.
மேலச்சாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மார்ச் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரி விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு வந்தன. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது.
சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் பூசப்பட்டது. சிறப்பு துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com