ஏ.வி.சி. கல்லூரியில் நூல்கள் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றன.


மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றன.
தருமபுரம் கல்வி நிறுவனங்களின் செயலர் மா. திருநாவுக்கரசு நூல்களை வெளியிட்டுப் பேசினார். கல்விக்குழு உறுப்பினர் ப.ந. ரத்தினக்குமார், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் குரு. மகேஷ், கல்லூரி முதல்வர் இரா. நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
கல்லூரிச் செயலர் கி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். தமிழாய்வுத் துறைத் தலைவர் சு.தமிழ்வேலு நூல்களை அறிமுகப்படுத்தினார்.
மயிலாடுதுறை ஸ்ரீராம் சந்திரா மிஷன் ஒருங்கிணைப்பாளர் ஆர். சங்கர், மாநில அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மூன்றாமாண்டு வேதியியல் துறை மாணவி மகாலெட்சுமி, முதுகலைத்தமிழ் துறை மாணவி அன்புநிதி ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் எழுதிய சேற்றில் மனிதர்கள், முதுகலைத்தமிழ் மாணவர்களால் தொகுக்கப்பட்ட குதிர் என்னும் தஞ்சை வட்டார வழக்குச்சொல் அகராதி, முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவர் உ. விக்னேஷ் எழுதிய என் மனம், இளங்கலைத் தமிழ் மாணவர்கள் முன்னெடுப்பில் உருவான செங்காந்தள் ஆகிய  நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. 
இந்நூல்களின் முதல் பதிப்பை முறையே வணிகவியல் துறைத் தலைவர் மா. மதிவாணன், தாவரவியல் துறைத்தலைவர் சீ. ராஜசேகர், வரலாற்றுத் துறைத் தலைவர் அ. சீனிவாசன், நுண்ணுயிரியல் துறைத்தலைவர் சீ.பிரம்மவித்தியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பட்டிமன்றப் பேச்சாளர் வி.ஆர். செந்தில் நகைச்சுவையுடன் ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்து நிறைவுரையாற்றினார்.  
தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் சு. விமல்ராஜ் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் தெ. திருமுருகன் நன்றி கூறினார். உதவிப் பேராசிரியர் ரா. தேவேந்திரன் தொகுத்து வழங்கினார்.
தமிழாய்வுத்துறை முன்னாள் தலைவர் துரை.குணசேகரன், ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி முதல்வர், இயக்குநர், இலக்கிய ஆர்வலர்கள், அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் ந.சரவணன், பூ.வெற்றிவேலன், இலக்கிய மன்றச் செயலர் இரண்டாமாண்டு வணிகவியல் மாணவர் ரா.மகேஷ், அலுவலகப் பணியாளர் கோ.பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com