செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை: திரளானோர் பங்கேற்பு

நாகை செüந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சியாக, தங்க கருட சேவை சனிக்கிழமை நடை பெற்றது.


நாகை செüந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சியாக, தங்க கருட சேவை சனிக்கிழமை நடை பெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19-ஆவது தலமாகவும், ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோரால் வழிபட்ட தலமாகவும் விளங்குகிறது நாகை செüந்தரராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பங்குனிப் பெருவிழா, கடந்த 13-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பங்குனிப் பெருவிழா நிகழ்வாக தினமும் காலை 7.30 மணிக்கு பெருமாள் வெள்ளிப் பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெற்று வருகிறது. இதன்படி, பங்குனிப் பெருவிழாவின் நான்காம் நாளான சனிக்கிழமை இரவு தங்க கருட வாகன சேவை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், செüந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், தங்க கருட வாகனத்துக்கு எழுந்தருளி சேவை சாதித்தார்.  இரவு சுமார் 7.45 மணிக்கு வேத மந்திர முழக்கங்களுடன் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதி புறப்பாடு தொடங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். 
21-இல் தேரோட்டம்: 
பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் மார்ச் 21-ஆம் தேதியும், திருக்கல்யாண உத்ஸவம் மற்றும் பீங்கான்ரத வீதியுலா ஆகியன மார்ச் 23-ஆம் தேதியும், தெப்ப உத்ஸவம் மார்ச் 28-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com