பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்: விவசாயிகள் முற்றுகை

செம்பனார்கோவில் அருகே பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


செம்பனார்கோவில் அருகே பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  அன்னவாசல், ஆறுபாதி, இளையாலுர், முக்கரும்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 321 விவசாயிகள் 2017-2018- ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், 108 விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகள் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, கூட்டுறவு வங்கிக்குச் சென்று கேட்டபோது, அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் தெரிவித்தும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com