கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு: குடிநீருக்காக 3 கி.மீ. நடந்து செல்லும் கிராம மக்கள்

சீர்காழி அருகே  கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஆலாலசுந்தரம் கிராமத்தில்

சீர்காழி அருகே  கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஆலாலசுந்தரம் கிராமத்தில், குடிநீருக்காக சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு  நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ சென்று குடங்களில் தண்ணீர் பிடித்துவரும் நிலை உள்ளது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலாலசுந்தரம் கிராமம்  சின்னத் தெருவில் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால், நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீருக்காக கைபம்பு அமைத்துக் கொடுக்கும் திட்டமும் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக இப்பகுதி மக்கள் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்தோ அல்லது சைக்கிள்களிலோ கொப்பியம் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால், அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஆலாலசுந்தரம்  பொதுமக்கள் கூறியது:
ஆலாலசுந்தரம் சின்னத் தெருவில் இருந்த கைபம்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவி நிறத்தில்,  உவர் நீர் வந்ததால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம்  புகார்
செய்தோம். 
மேலும், மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தியும் மனு கொடுத்தோம். இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது, வெயில் கொளுத்தி வருவதால், பெண்கள் மற்றும் முதியவர்கள் 3 கி. மீ. தொலைவுக்கு நடந்து சென்று, தண்ணீர் பிடித்து வருவதில் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, ஆலாலசுந்தரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com