சர்வதேச நுகர்வோர் தின விழா கருத்தரங்கம்

நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பு சார்பில் 24-ஆம் ஆண்டு சர்வதேச

நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பு சார்பில் 24-ஆம் ஆண்டு சர்வதேச நுகர்வோர் தினவிழா பாதுகாப்பு கருத்தரங்க மாநாடு, மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதர் தெற்கு வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.ஜி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் ஜி.வி. கணேசன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் எம். ஹலிக்குல்ஜமான், மாவட்ட அமைப்பாளர் எம். கண்ணையன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. அலாவுதீன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.பி. மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்டச் செயலாளர் காசி. சுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினார். சட்ட ஆலோசகரான உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஏ. சங்கமித்திரன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட உதவி பொருள்கள் வழங்கப்பட்டன.
தீர்மானங்கள்: மக்களவைத் தேர்தலில், சேவை நோக்கம் கொண்ட வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை வெற்றி பெற செய்வது, தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், படிப்பறிவு இல்லாத மக்கள், புகாரளிக்க வசதியாக தனி எழுத்தரை நியமிக்கவும் அரசைக் கேட்டுக்கொள்வது,  விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் வி. சாமிநாதன் நன்றி கூறினார்.
தருமபுரம் ஆதீனம் 
கலைக் கல்லூரியில்...
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், சர்வதேச நுகர்வோர் தின கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ். சுவாமிநாதன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். நுண்கலை மன்றப் பொறுப்பாசிரியர் கோ. செளந்தரராஜன் வரவேற்றார்.
முதல் அமர்வில், தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் மயிலாடுதுறை கிளை மேலாளர் வி. நாகராஜன், பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு பற்றி விளக்கினார். இரண்டாம் அமர்வில், வழக்குரைஞர் ஜி. ராஜேஷ், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி பேசினார். மூன்றாம் அமர்வில், உணவுக் கலப்படம் கண்டறிதல் என்ற தலைப்பில் கீதாராணி எடுத்துரைத்தார். 
தொடர்ந்து, நுகர்வோர் விழிப்புணர்வு பற்றிய கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர் மா. திருநாவுக்கரசு பரிகளை வழங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் செளந்தரராஜன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், தாரா மற்றும் மன்ற உறுப்பினர்கள்
மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com