பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
By DIN | Published On : 24th March 2019 05:11 AM | Last Updated : 24th March 2019 05:11 AM | அ+அ அ- |

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் எம். துரைராசன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி இயக்குநர் பி. செல்வகுமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான எஸ். கணேஷ்குமார் வரவேற்றார். எஸ். செல்லதுரை சிறப்புரையாற்றினார்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பருவத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கிலத்துறை பேராசிரியர் எஸ்.வி. விஜயபாபு நன்றி கூறினார்.