மக்களவைத் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் மும்முரம்: நாகை மாவட்ட ஆட்சியர்

மக்களவைத் தேர்தலையொட்டி, நாகை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்று ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலையொட்டி, நாகை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்று ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தலையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் துணை வட்டாட்சியர் நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை  திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், தொகுதி வாரியாக 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களிடமிருந்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் தொடர்புடைய குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 18 நிலையான கண்காணிப்புக் குழுக்களின் இயக்கங்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கருடா ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்திடும் வகையில்  துண்டுப் பிரசுரங்கள், பேரணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான செலவின மேற்பார்வையாளராக  சஞ்சய் முகர்ஜி, நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம்  சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான செலவின மேற்பார்வையாளராக  மகேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) 6 பயிற்சி மையங்களில் நடைபெறவுள்ளன என்று ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com