மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
By DIN | Published On : 24th March 2019 05:14 AM | Last Updated : 24th March 2019 05:14 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள நாகை வடக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் எம்.என். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் எஸ்.பி.என். செந்தில், கமல் மலர், முகுந்தன், சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் தியாகராஜன், பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஆர்.கே. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ரிபாயுதீன் ஏற்புரையாற்றினார். சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் சந்துரு வரவேற்றார். பத்மநாபன் நன்றி கூறினார்