மயிலாடுதுறை திமுக வேட்பாளர் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் திருவிடைமருதூர் செ. ராமலிங்கம், திருவெண்காடு பகுதியில் கட்சி பொறுப்பாளர்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் திருவிடைமருதூர் செ. ராமலிங்கம், திருவெண்காடு பகுதியில் கட்சி பொறுப்பாளர்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அவருக்கு, சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சசிக்குமார் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 
அப்போது, செ.ராமலிங்கம் கூறியது:
மயிலாடுதுறை தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர பாடுபடுவேன். தஞ்சை, திருவாருர் மற்றும் நாகை பகுதிகளை உள்ளடக்கிய டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க பாடுபடுவேன். வேளாண்மையை மையமாக கொண்டு தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்திட பாடுபடுவேன் என்றார் அவர்.
கும்பகோணம் சட்டப் பேரவை உறுப்பினர் அன்பழகன், நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன், மாவட்டப் பொருளாளர் பூம்புகார் ரவி, பொதுக் குழு உறுப்பினர் மகேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com