Enable Javscript for better performance
ஆச்சாள்புரம் கூட்டுறவு வங்கியில் இரவு நேரத்தில் பயிர்க் காப்பீட்டுத் தொகை பட்டுவாடா: தடுத்து நிறுத்த- Dinamani

சுடச்சுட

    

    ஆச்சாள்புரம் கூட்டுறவு வங்கியில் இரவு நேரத்தில் பயிர்க் காப்பீட்டுத் தொகை பட்டுவாடா: தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர்

    By DIN  |   Published on : 27th March 2019 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரத்தில் இரவு நேரத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.
    சீர்காழி குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியரும், தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியருமான விஜயராகவனுக்கு,  ஆச்சாள்புரம் கூட்டுறவு வங்கியில் செவ்வாய்கிழமை இரவு விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுப் பணம் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
    இதைத்தொடர்ந்து, காவல் துறையினருடன்  ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர்,  வங்கி செயலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.  கடந்த 2016-2017- ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வந்துள்ளதாகவும் காலை முதல் கொடுத்து வருவதாகவும் வங்கி செயலர் கூறியுள்ளார்.
    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இரவு நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யக்கூடாது என தேர்தல் பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டு, பகல் நேரத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால்,100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai