Enable Javscript for better performance
ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை 

    By DIN  |   Published on : 27th March 2019 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் 
    செய்தனர். 
    சீர்காழி சமூக பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் இந்துமதி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் செம்மங்குடி செல்லும் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காடுவெட்டி  பகுதியிலிருந்து சீர்காழி நோக்கி பீரவீனா என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் சோதனை செய்ததில், அதன் இருக்கைக்கு அடியில் ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அதைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai