Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து, மன்மதன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கதிர்வேல் (42). கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர், கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் பரிந்துரையின்பேரில்,  மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, போலீஸார் கதிர்வேலுவை  செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai